வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக மத்திய அரசு தயாரிக்கும் புதிய செயலி!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:29 IST)
உலகின் முன்னணி செயலியான வாட்ஸ்ஆப் சமீபத்தில் திடீரென ஒரு சில நிபந்தனைகளை விதித்ததால் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயனாளிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்ததை அடுத்து வாட்ஸ் அப்-புக்கு மாற்றாக கூ உள்பட ஒருசில மெசேஜ் செயலிகளை நோக்கி பயனாளிகள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் வாட்ஸ்அப் செயலியின் புதிய நிபந்தனை குறித்து சமீபத்தில் இந்திய நீதிமன்றமும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக மத்திய அரசு புதிய செயலை ஒன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தகவல் பரிமாற்றத்திற்காக மத்திய அரசு இந்த வாட்ஸ் அப் செயலியை போல புதிய செயலியை உருவாக்கி வருவதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வாட்ஸ் அப் செயலியில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பயனாளிகளாக இருக்கும் நிலையில் மத்திய அரசின் மாற்று செயலியால் வாட்ஸ் அப்புக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்