மருத்துவ பொருட்களுக்கான சுங்கவரி விலக்கு – கால அவகாசம் நீட்டிப்பு!

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:09 IST)
இந்தியாவில் கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கான சுங்கவரி விலக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் மருத்துவமனைகளில் எளிதில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள உலக நாடுகள் பலவற்றில் இருந்து மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், மருந்துகள் வாங்கப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதை நோக்கமாக கொண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு சுங்கவரியில் விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு அறிவித்த சுங்கவரி விலக்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சுங்கவரி விலக்கை செப்டம்பர் 30 வரை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்