இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை முழுவதுமாக தொடங்கப்படாமல் உள்ளது. சிறப்பு விமானங்களில் மட்டுமே பயணிகள் பயணிக்கும் நிலையில் சமீபத்தில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது ஒமிக்ரான் பாதிப்புகள் இந்தியாவில் குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு இதுவரை அமலில் இருந்த 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.