பள்ளி கேண்டினுக்குள் துரித உணவுக்குள் தடை !

வியாழன், 7 நவம்பர் 2019 (10:06 IST)
பள்ளி கேண்டின்களில் துரித உணவுகள் விற்க மற்றும் விளம்பரம் செய்ய தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

துரித உணவுகள், கொழுப்புச் சத்து உணவுகள் ஆகியவற்றால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் உடல் எடை அதிகமாதல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் அதிகமாகி வருகின்றன.

இதனால் மாணவர்கள் துரித உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிக்கூட சமையல் கூடம், கேண்டின் மற்றும் பள்ளிக்கு வெளியே 50 மீட்டர் தூரத்தில் துரித உணவுகள் விற்பனை மற்றும் அவற்றின் விளம்பரம் செய்ய மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது. இது சம்மந்தமான வரைவு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்