முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கா? விரைவில் அறிவிக்கின்றது மத்திய அரசு!

சனி, 12 பிப்ரவரி 2022 (19:26 IST)
இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் முக கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசு பரிசீலனை செய்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சுகாதார நிபுணர்கள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கை குழுவை மத்திய அரசு முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா? என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பை உலக அளவிலான நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் முக கவசம் அணிவது என்பது காரில் சீட் பெல்ட் அணிவதற்கு சமமானது என்றும் ஒரு தரப்பினர் கூறி இருப்பதாகவும் எனவே முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு என்பது இப்போதைக்கு இந்தியாவில் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்