இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளூர் விமான போக்குவரத்துக்கு மட்டும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விமான பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டது.
விமான பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விமானத்திற்குள் உள்ள அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் உட்கார்ந்து செல்லஅனுமதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது
இந்த நிலையில் தற்போது விமானத்துறை அமைச்சகம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைத்து விமான நிறுவனங்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதனை அணிந்து இன்று முதல் விமானங்கள் அனைத்திலும் நடு இருக்கைகள் காலியாக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது