இதனிடையே, பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள், அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில், மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு முறைகேடு, மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்நிலையில், தற்போது ரூ. 6 ஆயிரத்து 630 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.