பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்ட நிலையில் திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? என்றும் முக்கியமாக கெளரவர்கள் யார் என்றும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டிருந்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த டுவிட் ஜனாதிபதி வேட்பாளரை இழிவு படுத்துவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கானா பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தான் திரெளபதியை இழிவுபடுத்தவில்லை என ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்தார். இதனிடையே லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் மனோஜ் சின்ஹா என்பவர் வர்மாவுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், உ.பி. போலீசார், திரெளபதி முர்மா தொடர்பான ட்வீட்டுக்காக ராம்கோபால் வர்மா மீது ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.