திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை கேள்வி

சனி, 25 ஜூன் 2022 (08:21 IST)
திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார் என பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? என்றும்,  முக்கியமாக கெளரவர்கள் யார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
 
ராம் கோபால் வர்மாவின்  இந்த டுவிட்  ஜனாதிபதி வேட்பாளரை இழிவு படுத்துவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கானா பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்
 
இந்த நிலையில் தான் திரெளபதியை இழிவுபடுத்தவில்லை என ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்