காவிரி விவகாரத்தில் பிரபல நடிகர்களுக்கு ஆப்பு!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (14:10 IST)
காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கடந்த 9ம் தேதி விவசாயிகள் பொதுக்கூட்டம் நடந்தது.



 
இதில், கன்னட நடிகர்கள் புனித் ராஜ்குமார், உபேந்திரா மற்றும் தர்ஷன் ஆகியோர், தமிழர்களுக்கு ஏதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். அவர்களது பேச்சு இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் கலகம் ஏற்பட்டது.

இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக லாரிகள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அதனால், கோவையை சேர்ந்த இளங்கோவன் என்ற வழக்கறிஞர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்கள் மீது புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய மூன்று கன்னட நடிகர்களின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 3 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்