ரத்தான ரயில் டிக்கெட் நாளை முதல் பணம் பெறலாம்: ரயில்வே அறிவிப்பு!

வியாழன், 4 ஜூன் 2020 (16:15 IST)
முன்பதிவு மையங்களில் நாளை முதல் பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 உடன் முடிவடைய இருக்கின்ற சமயத்தில் பிரதமர் மோடி நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், அது முந்தைய ஊரடங்கிலிருந்து வேறுபட்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரயில்சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில்கள் தவிர மற்ற ரயில்களுக்காக ஜூன் 30 வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
 
தற்போதைய அறிவிப்பின் படி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களின் முன்பதிவு மையங்களில் நாளை முதல் பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்