சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் இந்திய அளவில் 2வது இடம்..!

புதன், 5 ஜூலை 2023 (14:51 IST)
சிஏ படிப்புக்கான தேர்வு முடிவு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் சென்னை மாணவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் 
 
கடந்த மே மாதம் சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 
 
சிஏ தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த தேர்வில் இந்திய அளவில் சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவர் இரண்டாவது இடம் பிடித்து சாதனை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்