பசு மாட்டின் மீது புகார் அளித்த தொழிலதிபர்

புதன், 2 மே 2018 (14:53 IST)
டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு நேர்ந்த விபத்திற்கு காரணமாக இருந்த பசு மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மாதா ஷெர்வாலி மார்க்கெட் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பசு மாடு தொழிலதிபரின் வாகனத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலதிபருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அந்த தொழிலதிபர், விபத்துக்குக் காரணமான  மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்