#BurnMeAlive டிரெண்டாகும் ஹேஷ்டேக்: மோடியை வச்சி செய்யும் இணையவாசிகள்!!

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (14:37 IST)
பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு அறிவித்தார். இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர்.


 
 
கருப்பு பணத்தை அழிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாக அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி டிமானடைசேஷன் மூலம் புழக்கத்திலிருந்த பணத்தில் 99% பணம் மட்டுமே திரும்ப வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்த தகவல் வெளியானதில் இருந்து இணையவாசிகள் மோடியை சகட்டு மேனிக்கு கேலி செய்ய துவங்கியுள்ளனர். மோடி டிமானடைசேஷனின் போது, எனக்கு 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள். 10 மாதங்களாக வேலை செய்து, திடீரென அமல்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் (டிமானடைசேஷன்) தோல்வியடைந்தால் என்னை உயிரோடு கொளுத்திவிடுங்கள் என பேசினார்.
 
என்னை உயிரோடு கொளுத்துங்கள் என மோடி கூறியதை வைத்துக்கொண்டு #BurnMeAlive என்ற ஹேஷ்டேகை கியேட் செய்து அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்