இஸ்லாமியப் பெண்களை ஏலம் விட்ட புல்லி பாய் ஆப் முடக்கம்!

திங்கள், 3 ஜனவரி 2022 (10:03 IST)
புல்லி பாய் என்ற செயலி மூலமாக பெண்கள் ஏலம் விடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த செயலி முடக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொழில்நுட்பம் மூலமாக பெண்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்போது புல்லி பாய் (bulli bai)          என்ற செயலியில் பல பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் இடம்பெற்று அவர்கள் எல்லாம் ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்களாக இருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி, குரல் எழுப்பவே இப்போது அந்த செயலி முடக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்