சபரிமலை விவகாரம்: பாத்திமா மீது அதிரடி நடவடிக்கை எடுத்த பி.எஸ்.என்.எல்

புதன், 24 அக்டோபர் 2018 (16:06 IST)
சபரிமலை விவகாரத்தால் ஏற்கனவே தனது வீடு தாக்கப்பட்டது மற்றும் முஸ்லீம் மதத்தில் இருந்து நீக்கியது ஆகியவற்றால் கடும் அதிர்ச்சியுடன் இருக்கும் பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
சபரிமலை விவகாரத்தில் சிக்கிய ரெஹானா பாத்திமா கொச்சியில் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். சபரிமலை விவகாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டதை அடுத்து பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அவரை பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாத்திமா பழரவிட்டோம் கிளைக்கு சென்று பணியை தொடங்கிய நிலையில் அந்த கிளையில் இருந்தும் பாத்திமாவை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து நேற்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே பாத்திமா சென்றுள்ளார்.
 
வீடு தாக்கப்பட்டது, மதத்தில் இருந்து வெளியேற்றியதை அடுத்து வேலைக்கு ஆபத்தும் வந்துவிடுமோ என்ற அச்சம் பாத்திமாவிடம் இருப்பதாக கூறப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்த தீர்ப்பை வீம்புக்காக நடைமுறைப்படுத்த முயற்சி செய்த பாத்திமாவுக்கு ஐயப்பன் கொடுத்த தண்டனைதான் இது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்