தூக்கில் தொங்கத் தயார்: மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட பிரிஜ் பூஷன் அறிவிப்பு..!

புதன், 31 மே 2023 (15:10 IST)
என் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார் என மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஜன் சரண் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரிஜ் பூஜன் சரண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
மேலும் தாங்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளிடம் நான் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும் என்றும் எந்த தண்டனையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பிரிஜ் பூஜன் சரண் சிங் தெரிவித்துள்ளார். 
 
மேலும் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயார் என்று பிரிஜ் பூஜன் சரண் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்