பாஜக மாவட்ட செயலாளர் 25 வயது பெண்ணுடன் ஓட்டம்!

வியாழன், 19 ஜனவரி 2023 (17:49 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக மாவட்ட செயலாளர் ஒருவர் 25 வயது இளம்பெண்ணுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஹர்தோய் மாவட்ட பாஜக செயலாளராக இருப்பவர் ஆஷிஸ் சுக்லா(47). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன்(21வயது) மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இவருக்கும் சமாஜ்வாதி கட்சி பிரமுகரின் மகள்(25 வயது) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் காதலாகியுள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் தன் மகளுக்கு திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தினார்.

இதுகுறித்து அறிந்த ஆஷிஷ் சுக்லா,இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு ஓடி விட்டார்.

தன் மகளைக் கடத்திச் சென்றுவிட்டதால ஆஷிஷ் சுக்லா மீது அப்பெண்னின் தந்தை புகாரளித்திருந்தார்.

இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆஷிஷ் சுக்லா மற்றும் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்