உத்தரபிரதேச மாநிலம் சம்பால் என்ற பகுதியில், கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவில், விவேக் அக்னிஹோத்ரி(26), மற்றும் இளம்பெண்ணுக்கும் இடையே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் 300க்கும் அதிகமான விருந்தினர்கள் குவிந்தனர்.
அப்போது, விவேக், மணமகளின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் மணமகனின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திருமணத்தை ரத்து செய்தார்.