முன்னாள் முதல்வர் மீது செருப்பு வீசி தாக்குதல்... விவசாயிகள் ஆவேசம்... தொண்டர்கள் அதிர்ச்சி!
வியாழன், 28 நவம்பர் 2019 (20:28 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றுகொண்டிருந்த பேருந்து மீது விவசாயிகள் கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியைப் பார்வையிட முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது தொண்டர்களுடன் சென்றார்.
அப்போது, அங்கு வந்த விவசாயிகள் பேருந்தை முற்றுகையிட்டு சந்திரபாபுவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
பின்னர்,அவர் அமர்ந்திருந்த பேருந்து மீது கற்கலை வீசித் தாக்குதல் நடத்தினர். அதை எதிர்பார்க்காத தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.