இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,84,676 பேருக்கு பூஸ்டர் டோஸ்!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:09 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,84,676 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும், 60 வயது மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன. நேற்று முதலாக நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.
 
இந்நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,84,676 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது குறித்த விரிவான பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, சுகாதார பணியாளர்கள் - 5,19,604 பேருக்கும், முன்கள பணியாளர்கள் - 2,01,205 பேருக்கும், 60 வயதுக்கு மேலானவர்கள் - 2,63,867 பேருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்