மும்பை விமான நிலையத்தில் கோ ஏர் விமானம் டெல்லி புறப்பட காத்திருந்தது. அப்போத் அங்கு விரைந்த பெண் ஒருவர், ஒரு பெண் விமான நிலைய பணியாளரை அணுகி, மும்பையில் இருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் இன்டிகோ 6E 3612 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
பின்னர், அங்கு விரைந்து வந்த இன்டிகோ விமான வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வெடிகுண்டு சோதனையில் ஈடுப்பட்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானது.