தென்னிந்தியாவில் வலுவாக எண்ட்ரி ஆகும் பாஜக.. கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

Siva

வெள்ளி, 15 மார்ச் 2024 (07:37 IST)
பாரதிய ஜனதா கட்சியால் வடநாட்டில் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நுழைய முடியாது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்றுகிறது என்று தெரிய வந்துள்ளது.

நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்த நிலையில் தற்போது திடீரென மாற்றம் கண்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

அதேபோல் தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் நல்ல வெற்றியை பெரும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருப்பதால் தென்னிந்தியாவிலும் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்ற இருப்பதாக தெரிகிறது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்