இந்த நிலையில் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியபோது, ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் உள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.
மேலும் வரும் மே 15-ம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் பிறகு பெங்களூருவுக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நகரின் தற்போதைய தண்ணீர் தேவை 2,100 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. அணைகளில் தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது” என தெரிவித்துள்ளார்.