கவிழ்ந்தது குமாரசாமி அரசு: கர்நாடகாவில் அடுத்தது என்ன?

புதன், 24 ஜூலை 2019 (08:07 IST)
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று கர்நாடகாவில் கவிழ்ந்த நிலையில் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அடுத்த ஆட்சி அமையும் வரை காபந்து அரசாக நீடிக்குமாறு கவர்னர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இன்று கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக எம்எல்ஏக்கள் கூடும் இந்த கூட்டத்திற்கு பின் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 224 ஆகும். இதில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டால் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 208ஆக மாறிவிடும். எனவே 105 எம்.எல்.ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைத்து விடலாம். தற்போது பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்