மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியா? பரபரப்பு தகவல்

திங்கள், 28 மார்ச் 2022 (07:45 IST)
உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெற உதவினால் மாயாவதி குடியரசுத்தலைவர் ஆக்கப்படுவார் என பாஜக தலைமை வாக்குறுதி அளித்ததாக ஒரு தகவல் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
 
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற உதவினால் மாயாவதி குடியரசுத்தலைவர் ஆக்கப்படுவார் என வாக்குறுதி அளித்ததாக பரவும் கருத்து தவறானது என  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.
 
 பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இவ்வாறு பொய் பிரசாரத்தை செய்து வருகிறது என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்