பாஜக எம்.பி சன்னி தியோலுக்கு கொரோனா உறுதி! –மருத்துவமனையில் அனுமதி!

புதன், 2 டிசம்பர் 2020 (09:34 IST)
பிரபல பஞ்சாபி நடிகரும் பாஜக எம்.பியுமான சன்னி தியோலுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

பாலிவுட் மற்றும் பஞ்சாப் மொழி படங்களில் பிரபலமான நடிகராக அறியப்பட்டவர் சன்னி தியோல். இரண்டு முறை தேசிய விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் பெற்ற இவர் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் சன்னி தியோலுக்கு உடல்நல குறைவால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்