ராகுலும் பிரியங்காவும் இராவணன் - சூர்ப்பனகை: பாஜக பிரமுகர் சர்ச்சை கருத்து

வியாழன், 31 ஜனவரி 2019 (23:08 IST)
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நிர்வாகியாக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். பிரியங்காவின் அரசியல் வருகை பாஜகவுக்கு நிச்சயம் பின்னடைவையே தரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எம்பியாக இருக்கும் பாஜக பிரமுகர் சுரேந்திர சிங் ராகுல், பிரியங்கா குறித்து கூறுகையில், 'அரசியலை பொறுத்தவரை பிரதமர் மோடி தான் ராமர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராவணன், அவரது தங்கை பிரியங்கா சூர்பனகை. ராமருக்கும், ராவணனுக்கும் தற்போது போர் தொடங்கியுள்ளது. ராமருக்கு எதிராக முதலில் சூர்பனகையை தான் ராவணன் அனுப்பினார். அதுபோல ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவை முதலில் அனுப்பியுள்ளார். யாரை அனுப்பினாலும் இந்த போரில் ராவணன் தோற்கப்போவதும்,  இலங்கையை வீழ்த்தி ராமர் வெற்றி பெறுவதும் உறுதி  என கூறியுள்ளார்.
 
சுரேந்திரசிங்கின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை பாஜகவினர்களே ரசிக்கவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியினர் சுரேந்திரசிங்கிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்