கர்நாடகாவில் பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி! – நாடாளுமன்ற கூட்டணி உறுதி!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (13:34 IST)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கிறது.



அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு முறையும் தொடர் வெற்றி பெற்று மத்தியில் பெரும்பான்மையில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்டவை இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

அதேசமயம் பாஜகவும் தங்களுக்கு பெரும்பான்மை குறைவாக உள்ள மாநிலங்களில் அங்குள்ள மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகத்தை தயாரித்து வருகின்றனர். அவ்வாறாக கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

தற்போது பேச்சுவார்த்தையில் நிறைவு ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் பாஜக – மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் வரை உள்ள நிலையில் இப்போதே கூட்டணி உறுதியாகியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்