தேசியக்கொடியை அவமதித்த பாஜக கொடி

திங்கள், 20 நவம்பர் 2017 (19:11 IST)
உத்தரபிரதேசத்தில் யோகி பங்கேற்ற பேரணியில் தேசிய கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கொடி பறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

பாஜக கட்சி சார்ப்பில் காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். முதல்வர் கூட்டத்திற்கு வரும் முன் கட்டடத்தின் உச்சியில் பறந்த தேசியக்கொடிக்கு மேல் பாஜக கட்சியின் கொடி பறந்தது.
 
இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேசியக்கொடியின் மரியாதைச் சட்டப்படி தேசியக்கொடிக்கு மேல் எந்தக் கொடியும் பறக்கக்கூடாது. இதையடுத்து அதிகாரிகள் அறிவுறுத்தியதை அடுத்து அவசரம் அவசரமாக பாஜக கட்சியின் கொடியை இறக்கிவைத்தனர். 
 
ஆனால் தேசியக்கொடிக்கு மேல் பாஜக கட்சியின் கொடி பறந்ததை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இதானல் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தேசப்பற்று குறித்து பேசும் பாஜக கட்சித் தொண்டர்களே தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்