பாஜக வின் ஆட்சி தலித் மற்றும் சிறுபாண்மையின மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக பாஜக மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வேளையில் அதைப் போக்கும் விதமாக இந்த உணவுக்கான பொருட்களான அரிசி, பருப்புப் போன்ற பொருட்களை தலித்துகளிடம் இருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது.
டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற 'பீம் மகாசங்கம் விஜய் சங்கல்ப' பேரணியில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரான இந்த கிச்சடியை கின்னஸ் சாதனையில் இடம்பெற வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்காக 20 அடி விட்டம், 6 அடி ஆழம் கொண்ட பாத்திரம் பயன்படுத்தப்பட்டது. இதை நாக்பூர் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் சமைத்தார்.