பீகார் சட்ட மன்ற தேர்தல் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தது
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் பாஜக கூட்டணி தற்போது 131 இடங்களில் முன்னிலையில் இருப்பதால், முன்னிலையில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் வென்றால் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து விடும் என்பதும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது