பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு.. எத்தனை கட்டம்? தேர்தல் முடிவு தேதி உள்பட முழு விவரங்கள்..!

Mahendran

திங்கள், 6 அக்டோபர் 2025 (17:13 IST)
பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.
 
பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
 
முதல் கட்ட வாக்குப்பதிவு: நவம்பர் 6
 
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: நவம்பர் 11
 
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
மொத்த தொகுதிகள்: 243 (இதில் 2 பழங்குடியினர் (ST), 38 தாழ்த்தப்பட்டோர் (SC) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன).
 
வாக்காளர்கள்: மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர் (ஆண்கள் 3.92 கோடி, பெண்கள் 3.50 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 1,725).
 
வாக்குச் சாவடிகள்: 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
 
வேட்புமனுத் தாக்கல்: முதல் கட்டத் தேர்தலுக்கு நவம்பர் 10-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 13-ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.
 
பீகார் தேர்தலுடன் சேர்த்து, ஏழு மாநிலங்களில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்