பாகுபலி புலி என்னும் பிரபாஸ் புலி! – ஹைதராபாத் பூங்காவில் குவிந்த கூட்டம்!
திங்கள், 2 மே 2022 (13:08 IST)
ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள பிரபாஸ் என்னும் பெயர் கொண்ட புலியை காண மக்கள் குவிந்து வருகின்றனர்.
ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் புலி, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ள வங்க புலி ஒன்றிற்கு பிரபாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பிரபாஸ் புலி அந்த பூங்காவில் வளர்ந்து வருகிறது.
ஆனால் சமீபத்தில் அதன் பெயர் பலகை புகைப்படத்தை சிலர் சோசியல் மீடியாவில் வைரலாக்கியதை தொடர்ந்து அந்த புலியை காண ஏராளமான மக்கள் தினம் வருகை தருகிறார்களாம். குழந்தைகள் இந்த புலியை பாகுபலி புலி என்றும் அழைக்கிறார்களாம்.
இதுபோல ஹைதராபாத் பூங்காவில் சூர்யா என்ற பெயர் கொண்ட புலி ஒன்றும் உள்ளதாம்.