வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, குப்தா ஆகியோர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது, மாட்டிறைச்சி உண்பது தண்டனைக்குரிய குற்றம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் மாட்டிறைச்சி வைத்திருப்போருக்கு ரூ.2000 அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.