ஒரு வங்கி கணக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பண பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால், அந்த கணக்கு மூடப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பண பரிவர்த்தனையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் வங்கி கணக்குகள் மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வங்கி கணக்கில் பணம் இருந்தாலும், எந்த விதமான பரிமாற்றமும் இல்லாமல் இருந்தால் கூட, கணக்கு மூடப்படும். பயனாளிகள் தங்களது கணக்குகளை நீடிக்க விரும்பினால், உடனடியாக வங்கிக்கு சென்று ஒரு சிறிய தகவலை வழங்கினால் கூட, அந்த கணக்கு செயலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கி கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருந்தாலோ அல்லது மைனஸில் இருந்தாலோ, அந்த கணக்குகள் மூடப்படும். வங்கியின் குறைந்தபட்ச இருப்பு தொகையை விட ரூ500 அதிகம் இருந்தால் மட்டுமே அந்த கணக்கு செயலில் இருக்கும். ஒரு வங்கி செயலற்ற கணக்காக மாற்றப்பட்டால், பயனாளிகள் கேஒய்சி (KYC) வழங்கி அந்த கணக்கை மீட்டு கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.