வங்கதேச வெள்ளத்திற்கு இந்தியாவே காரணம்.. ஊடகங்கள் செய்தியால் பரபரப்பு..!

Mahendran

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (11:33 IST)
வங்கதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா தான் காரணம் என வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது
 
இந்தியாவின் திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் உள்ள டம்பூர் என்ற அணை முன்னறிவிப்பு இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையை முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக திறந்து விட்டது தான் வங்கதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு காரணம் என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து வங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. திரிபுராவில் உள்ள கும்டி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள டம்பூர் அணை திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வங்கதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மை அல்ல.

கும்டி ஆற்றின் நிர்ப்பிடிப்பு பகுதிகளில் கலந்து சில நாட்களாக மிக அதிக மழை பெய்து உள்ளதே வெள்ளத்துக்கு காரணமே தவிர அணை திறக்கப்பட்டது காரணம் அல்ல என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்