இந்தியாவில் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தளங்கள் இந்துக்களின் புனித தளங்கள் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களுக்கான யாத்திரை தொடங்கியது. ஏப்ரல் 2 கேதர் நாத் யாத்திரை தொடங்கிய நிலையில், ஏப்ரல் 27 பத்ரி நாத் கோவில் யாத்திரை தொடங்கியுள்ளது.
மேலும், பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் கூறிய நிலையில், இன்று பத்ரி நாத் கோவில் நடை, வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது.