கெட்ட வார்த்தை பேசுவதில் பாஜக, பகுஜன் சமாஜ் இடையே போட்டி: அகிலேஷ் யாதவ் விலாசல்

ஞாயிறு, 24 ஜூலை 2016 (09:50 IST)
சமீபத்தில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியை தகாத வார்த்தைகளால் பாஜகவை சேர்ந்த தயாசங்கர் சிங் விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் இதற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். பாஜகவும் அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர்ந்து தயாசங்கர் சிங் குடும்பத்தினர் மீது வார்த்தை தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், மாயாவதி குறித்து தயாசங்கர் சிங் தெரிவித்த கருத்து மிகவும் தவறானது. கண்டிக்கத்தக்கது. மேலும் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதாக தயாசங்கர் கூறியது உண்மையே என்றார்.
 
தயாசங்கருடைய குடும்பத்தில் உள்ள பெண்களை பகுஜன் சமாஜ் கட்சியினர் தரக்குறைவாகத்தானே பேசியிருக்கின்றனர். பொது இடங்களில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது சரிதானா?
 
கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் இடையே யார் அதிக அளவில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என கடுமையான போட்டி நிலவி வருகிறது என்றார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்