அப்போ ஆதரவு.... இப்போ எதிர்ப்பு....ரூ.2000 நோட்டை திரும்ப பெற வேண்டும்; பாபா ராம்தேவ்

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (21:21 IST)
மோடி உயர் மதிப்பு ரூபாய் செலாது என்று அறிவித்த போது மோடியின் இந்த நடவடிக்கை துணிச்சலானது என யோகா குரு பாபா ராம் தேவ் அப்போது பாராட்டினார். தற்போது இந்த ரூ.2000 ரூபாய் திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ் கூறியதாவது:-
 
ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்காக நான் பாஜக-வை ஆதரித்தேன். ரூ.2000 நோட்டு கொண்டு வந்தது நல்ல விஷயமல்ல. இதனால், தீவிரவாதமும், கருப்புப் பணமும் அதிகரிப்பதோடு, தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை விலைக்கு வாங்க உதவும்.
 
ரூபாய் நோட்டை பிரதமர் எதற்காக வாபஸ் பெற்றார் என தெரியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவது எந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல. 
 
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் சூட்கேஸ் போன்ற மிகச் சிறிய இடத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை பதுக்க உதவுகிறது. எனவே, இரண்டாயிரம் ரூபாயை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்