’பாட்ஷா’ பட நடிகருக்கு பாஜகவின் துணைத் தலைவர் பதவி.. ரசிகர்கள் வாழ்த்து..!

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்த தேவன் என்பவருக்கு கேரள மாநில பாஜக துணை தலைவர் பதவியை கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்  

கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர் நடிகர் தேவன்.  ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார்.  

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து கேரளாவில் ஏராளமான நடிகர்கள் பாஜகவில் இணைந்த போது தேவன் மற்றும் சுரேஷ் கோபி பாஜகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் தேவனுக்கு தற்போது கேரள மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநில துணைத் தலைவர் பதவி பெற்ற நடிகர் தேவனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்