வட மாநிலங்களில் பசுவதை சட்டம், கால்நடை பராமரிப்பு சட்டம் போன்றவை கடுமையாக பின்பற்றப்படுவதோடு பசு இறைச்சி விற்பது குற்றமாக கருதப்படுகிறது. அதேசமயம் எருமை இறைச்சி போன்றவை மாநிலம் பொறுத்து அனுமதிக்கப்படுபவையாக உள்ளது.
இந்நிலையில் கால்நடை பாதுகாப்பு சட்ட திருத்தத்தை அசாம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி கோவில்களை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மாட்டிறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து, சமண, சீக்கிய மற்றும் பிற மாட்டிறைச்சி சாப்பிடாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்களை விற்கவும் தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.