உலகின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது: முதல்வர்
திங்கள், 7 நவம்பர் 2022 (20:36 IST)
உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்
அசாம் மாநில முதல்வர் இன்று திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 55 இடங்களை எங்கள் கூட்டணி வெல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி வட கிழக்குப் பகுதிகளுக்கு 60 முறை விஜயம் செய்துள்ளார் என்றும் இதுவரை எந்த பிரதமரும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்த அளவுக்கு வருகை தந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், பாஜக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என அசாம் முதலமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது