அசாம் மா நிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் திரிதிமேதா தாஸ்(38) இவர் அப்பள்ளியில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில், அவர் கோபத்துடன் கையில் பட்டாக்கத்தியுடன் பள்ளி வளாகத்தில் வலம் வந்தார்.
இதுகுறித்து, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பள்ளிக்கு வந்த போலீஸார் தலைமை ஆசிரியரிடம் விசாரித்தனர்.
பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தன் மீது எரிச்சல் மற்றும் விரக்தியின் காரணமாக அவர்களை எச்சரிக்கும் நோக்கத்தால், இப்படி அவர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.