கடன் நீக்கம் வேறு, கடன் தள்ளுபடி வேறு: அருண்ஜெட்லி விளக்கம்

திங்கள், 1 அக்டோபர் 2018 (20:59 IST)
கடன் நீக்கத்திற்கும் கடன் தள்ளுபடிக்கும் வேறுபாடு இருப்பதாகவும் இரண்டையும் ஒன்று என்று பலர் குழப்பிக்கொண்டு விமர்சனம் செய்வதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'கடன் நீக்கம் என்பது ஆண்டு கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது என்றும் இது கடன் தள்ளுபடி அல்ல என்றும் கூறிய அமைச்சர் அருண்ஜெட்லி, அந்த கடன் தொகை செலுத்தப்படும் வரை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 500 கோடி கடன் தொகை நீக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்த தகவலுக்கு இவ்வாறு விளக்கமளித்த அமைச்சர் இது கடன் தள்ளுபடி பட்டியலில் வராது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி வாராக்கடன் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், முதல் காலண்டில் 36 ஆயிரத்து 551 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்