ஆயிரம் டூ லட்சம்: சியோமியின் எம்ஐ கிரெடிட்

திங்கள், 1 அக்டோபர் 2018 (15:23 IST)
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முக்கிய அங்கமாய் உள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டிவி போன்ற இதற சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது எம்ஐ கிரெடிட் சேவையை துவங்கியுள்ளது. 
 
வாடிக்கையாளர்களுக்கு சிறு கடன் அளிப்பதற்காக எம்ஐ கிரெடிட் என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சியோமியின் எம்ஐ சமுகப் பக்கத்தில் இருந்து எம்ஐ கிரெடிட் செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 
 
இந்த சேவை மூலம் கடன் பெற, எம்ஐ கணக்கினை பயன்படுத்தி செயலிக்குள் நுழைய வேண்டும். பின்னர் அடிப்படை விவரங்கள்,  ஆவணங்க, முகவரி, மாத சம்பளம் ஆகிய விவரங்களை பதிவிட வேண்டும். 
 
விவரங்களை சரி பார்த்த பின்னர் கடன் தொகையின் அளவு, எவ்வளவு காலத்திற்குள் திருப்பி செலுத்துவீர்கள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும். இதை செய்து முடித்தால் கடன் தொகை உங்கள் கணக்கில் போடப்படும்.
 
சியோமி நிறுவனம் சிறு கடனை மாதம் 1.8 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் அளிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
 
ஆனால், எம்ஐ தயாரிப்புகள் அல்லது எம்ஐ போன் உபயோகிப்பவர்களால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்