ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள சில ஆடியோ டேப்பில், "சுனந்தா உயிரிழந்தது, சசிக்கு முன்பே தெரியும் என்றும் சுனந்தா 307-வது அறையில் கொல்லப்பட்டு பின் 345-வது அறைக்கு மாற்றப்பட்டது உள்பட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்து வரும் போலீசாருக்கு இந்த டேப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.