சமீபத்தில் அந்த சிறுவன், மெல்ஜிபாயின் மகளின் அந்தரங்க வீடியோ ஒன்றை இணையத்தில் பரப்பியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மெல்ஜிபாய் இதுகுறித்து சிறுவனின் குடும்பத்திடம் பேச தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவனின் குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் மெல்ஜிபாய் மற்றும் குடும்பத்தினரை மோசமாக தாக்கியுள்ளனர். இதில் மெல்ஜிபாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மெல்ஜிபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், சிறுவனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளுக்கு நடந்த கொடுமையை தட்டி கேட்க சென்ற தந்தை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.