அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு.. சிபிஐ எதிர்ப்பு

Mahendran

வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:43 IST)
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச நீதிமன்றம் வந்தனர் என்றும், ஆனால்  அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யக்கூடாது என்றும் சிபிஐ தரப்பு வாதம் செய்தது.
 
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘வழக்கு தொடர்பாக வாதாடுங்கள். ஜாமின் கோரி எந்த நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
 
அதற்கு சிபிஐ தரப்பு, ‘வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால், அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை என சிபிஐ வழக்கறிஞர் வாதம் செய்தார்.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை பிற்பகலும் தொடர உள்ளதாகவும், இன்றே இந்த மனு குறித்த உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்