அடையாளம் தெரியாத மற்றும் உரிமை போராட்ட பிணங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, பயோ மெடிக்கல் கழிவுகளை கடத்தியது, தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியது என சந்திப் கோஷ் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.